புதுடில்லி : சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சி லோக்சபா எம்.பி. நட்டுபாய் கோமன்பாய் படேலின் டில்லி, சில்வாசா வீடுகளில் மத்திய புலனாய்வு துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, இந்த சோதனை நடைபெற்று வருவதாக சி.பி.ஐ.தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோமன்பாய் படேல், லோக்சபாவிற்கு புதுமுகம் என்பது குற […]
கொச்சி : இந்திய மீனவர்கள் 2 பேரை மரணத்திற்கு காரணமான இத்தாலி கப்பல் என்ரிக்கா லெக்ஸியில் தடயவியல் அறிஞர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இக்கப்பலில், வேறு ஏதனும் ஆயுதங்கள் உள்ளனவா என்பது குறித்து சோதனை மேற்கொள்ள கொல்லம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, தடயவியல் அறிஞர்கள் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர். இக்கப்பல் ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் […]
காபூல் : ஆப்கனில் குரான் எரிக்கப்பட்ட நிகழ்விற்கு, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ முகாமில், குரான் சிலநாட்களுக்கு முன் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஆப்கன் படையினர், அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். இதுமட்டுமல்லாது, இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள் […]
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில், மெகபூபா முப்தி தலைமையிலான பீப்பிள் டெமோக்ரடிக் பார்டி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. ஓமர் அப்துல்லா தலைøயிலான அரசு ஊழலில் திளைத்து வருகிறது. இதன்மூலம், அவர் மாநிலத்தை ஆளும் அதிகாரத்ரை இழந்துவிட்டார். அவர் உடனே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முப்தி மற்றும் அவரது ஆதரவா […]
திருநெல்வேலி : உதயகுமார் தலைமையிலான கூடங்குளம் தலைமையிலான அணுஉலை எதிர்ப்புக்குழுவின் 72 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை மறுநாள் (26ம் தேதி) சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது. […]
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டி துணை மின் நிலையம் முன் இண்டிகா கார் லாரியுடன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். ஆண்டிப்பட்டியிலிருந்து வந்த இண்டிகா கார், ராஜபாளையத்திலிருந்து வந்த லாரியுடன் எதிர்பாராவிதமாக நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்து […]
புதுடில்லி : இஸ்ரோ நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி ரோதம் நரசிம்ஹா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ளார். ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய விஞ்ஞானிகளை அவமதிக்கும் நிகழ்வு கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையி […]
ஐக்கிய நாடுகள் : சிரியாவில் நிலவிவரும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும், மனித உரிமை மீறல் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐ.நா. சபை, மற்றும் அரபு நாடுகள் சார்பில் சிரிய தூதராக கோபி அனான் நியமிக்கப்பட்டுள்ளார். 73 வயதாகும் கோபி அனான், ஐ.நா., அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் என்பது குறிப்பிடத்த […]
பௌபா டிஜிடா : கேமரூன் நாட்டின் தேசிய பூங்காவில் சூடான் மற்றும் ஷேட் நாடுகளில் வேட்டைக்காரர்களால், கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட 500 யானைகள் வேட்டையாடப்பட்டிருப்பதாக பூங்கா உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, இதுவரை 480 யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், 458 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூங்க […]
பெங்களூரு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரியை, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சந்தித்துப் பேசியுள்ளார். முதல்வர் சதானந்த கவுடாவின் செயல்பாடு அதிருப்தியளிப்பதாக கட்காரியிடம் எடியூரப்பா கூறியதாகவும், மீண்டும் தன்னையே முதல்வராக நியமிக்கவுமாறும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. பிப்ரவரி 27ம் தேதி தான் 70வது பிறந்தநாள் கொண்டாட உள்ளதாகவும், பிறந்தநாள் பரிச […]
இலங்கை அரசின் வேலைத்திட்டங்களால் உயிரியல் பல்வகைத்தன்மை மிக்க சுற்றுச்சூழல் வளங்கள் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். […]