எனது கடவுச்சொற்கள்!

கடவுச் சொல்லாகிய ரகசியச் சொல் பெரும்பாலும் எதோ ஒரு விதத்தில் நாம் அறிந்த பெயருடனோ அல்லது நமது எண்ணத்துடனோ இணைந்தே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதில் சில எண்கள், எழுத்துகள் மற்றும் குறியீடுகளை சேர்க்கும் வித்தைகள் அறிந்து மற்றவர்கள் எளிதில் அடையாளம் காணமுடியாதபடி செய்துவிடுகிறோம். இருப்பினும் இதன் பின்புலன் மேற்கூறியவையே! நான் பயன்படுத்திய கடவுச் சொற்களை பற்றியதே இப்பதிவு. மற்றவரின் கடவுச் சொல்லை அறிந்து கொள்வதில் பெரிய சுவாரசியம் இருக்க தான் செய்கிறது.

எப்பொழுதும் எனது பயனர் கணக்குகள் அனைத்துக்கும் ஒரே கடவுச் சொல்லை பயன்படுத்தும் பழக்கம் உடையவன் நான். இது சரியான அணுகுமுறை இல்லை என்பதை நான் நன்கு அறிந்திருந்தும் என் கடவுக் சொற்களை பாதுகாக்க என்றுமே நான் முயன்றது இல்லை. இதனால் ஒரு சில முறை எனது கடவுச் சொற்கள் களவாட பட்டது என்பதே நிதர்சனம்.

pondicherry – இது நான் பிறந்து வளர்ந்த நகரம் மட்டுமல்ல, நான் மிகவும் நேசிக்கும் நகரம் இதுவே, வெகு காலம் எனது பிரதான கடவுச் சொல்லாய் திகழ்ந்தது இதுவென்றால் அது மிகையல்ல.

pondicherry1 – கவவுச் சொல்லில் சிறிய மாறுதல் தேவை என்று உணர்ந்த பொழுது, சிறிய மாற்றத்துடன் உபயோகப்படுத்திய கடவுச் சொல்.

nimban*1, nimban*2, nimban*3, nimban*4 – பொதுவாக வங்கி மற்றும் வர்த்தக கணக்குகளில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயனர் கணக்குக்காக ஒன்று, பரிவர்த்தனை கணக்குகாக மற்றொன்று என இருவேறு கடவுச் சொற்களை பயன்படுத்த வேண்டும். மேலும் இச்சொற்களை இரு வாரத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்தல்வேண்டும். இதற்காக எனது இணைப்பு பெயருடன் இணைந்த இந்த நான்கு கடவுச் சொற்களை நேர் அணுகல் முறையில் பண்படுத்தி வந்தேன்.

nimban*91 – pondicherryக்கு பிறகு எனது பிரதான கடவுச் சொல் இது, சில தவிர்க்க இயலாத காரணத்தால், இதனை மாற்றம் செய்தேன். நேற்று வரை எனது வலைப்பூவின் கடவுச் சொல்லும் இதுவே. எனது கூகுள் மின் அஞ்சல் கணக்கு சிறிது காலம் வேறு சிலரால் பந்தாடப்படதால், கடந்த மார்ச் மாதம் முதல் அந்த கணக்கை பயன் படுத்துவதை முழுமையாக தவிர்த்துவிட்டேன்.

identity*99, identity*91 - இக்கடவுச் சொற்களின் மூலம் எனது பல்கலைகழக தோழி என்பதே நிஜம், எனது யாஹூ மின் அஞ்சல் கடவுச் சொல்லை களவாடி, பிறகு அந்த மின் அஞ்சலுக்கு அவள் அனுப்பிய அனைத்து தகவல்களையும் அழித்து விட்டு, identity என்ற கடவுச் சொல்லை பயன்படுத்தி வந்தாள், பெரும் சிரமத்திற்கு பிறகு அவளிடம் போராடி பெற்றதே identity என்ற கடவுச் சொல். பிறகு நான் எந்த சிரமமும் இன்றி சிறிய மாறுதலுடன் இக்கடவுச் சொல்லை சிறிது காலம் பயன்படுத்தி வந்தேன். (குறிப்பு: இவளது ரகசியம் காக்க இவளது பெயரை பதிக்க இயலவில்லை, முதலில் இவளையே நான் மண முடிப்பதாக இருந்தது, பிறகு இவளுடன் ஏற்ப்பட்ட கருத்து முரண் பாட்டால் விலக நேரிட்டது. இருப்பினும் “பங்காளி” என்ற செல்ல பெயரால், என் மனைவி மற்றும் நெருங்கிய நண்பர்களால் அறியப்படுகிறாள். இவளை பற்றி தனி பதிவாக சமயம் அமையும் பொழுது எழுதுகிறேன்).

*123, *123*91 – இவை இரண்டும் எனது மடிக் கணினின் கடவுச் சொற்கள், தற்பொழுதும் இவை பயன் பாட்டில் உள்ளன.

2206 – இது எனது பிறந்த தேதியையும் மாதத்தையும் குறிக்கும் மிக எளிமையான கடவுச் சொல், ஒரே ஒரு பயனர் கணக்குக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறேன், எந்த பயனர் கணக்கு என்பதே ரகசியம்.

ஒரு அறிஞர் கடவுச் சொல்லை பல் தூரிகையுடன் ஒப்பிட்டு கூறியது நினைவுக்கு வருகிறது. “கடவுச் சொல் உங்கள் பல் தூரிகையை போன்றது, அதை மற்ற யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர், மேலும் அதை ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள்.” மேலே நான் பதிவிட்ட அனைத்தும் தூக்கி எறியப்பட பல் தூரிகைகளை போன்றது, ஒன்று இரண்டை மட்டும் வேறு சில பொருள்களை சுத்தம் செய்ய பத்திர படுத்தி உள்ளேன். தற்பொழுது நான் பயன் படுத்தும் நிகழ்கால கடவுச் சொற்கள் நான், எனது மனைவி மற்றும் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என மூவரை கொண்ட சிறிய வட்டத்திற்குள் பத்திரபடுத்தபட்டுள்ளது.

~ by Nimban Karthick மேல் December 15, 2010.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.